பாட்டாளி மக்கள் கட்சி 10 இடங்களில் போட்டியிடும் - அண்ணாமலை
பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என அண்ணாமலை கூறினார்.
விழுப்புரம்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பா.ம.க. அறிவித்துள்ளது. இதையடுத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி 10 இடங்களில் போட்டியிடும். பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.