பயிர் காப்பீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் கிழக்கு ஒன்றிய பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜதுரை,தயா கோவிந்தசாமி ,ராமமூர்த்தி ,சம்பத் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய தலைவர் லோகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட பா.ம.க. செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து புதுப்பட்டிணம் கடைவீதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். மழையின்றி வரட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து கொள்ளிடத்தில் பா.ம.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பா.ம.க. மாவட்ட தலைவர் சித்தமல்லி பழனிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், காசி பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகவேல், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள்ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். முடிவில் கனகராஜ் நன்றி கூறினார்.