பா.ம.க. செயற்குழு கூட்டம்
சங்கரன்கோவிலில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் பால் நேரு, மாநில துணைத்தலைவர் சேது ஹரிஹரன், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சுவாமிதாஸ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மலையாங்குளம் கிராமத்தில் இயங்கி வந்து மூடப்பட்ட தனியார் மில் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவிலில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட வேண்டும். ஒருங்கிணைந்த காய்கறி கடைகள் அனைத்தும் ஊருக்குள்ளே இருக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் குருவிகுளம் ஒன்றிய தலைவர் நடராஜன், மாவட்ட விவசாய சங்க தலைவர் மதிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.