பிரதமர் மோடி 25-ந் தேதி பல்லடம் வருகை..10 லட்சம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் உரை - அண்ணாமலை


பிரதமர் மோடி 25-ந் தேதி பல்லடம் வருகை..10 லட்சம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் உரை - அண்ணாமலை
x

‘என் மண் என் மக்கள்’ நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 25-ந்தேதி பல்லடம் வருகை தர உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தல் தலைமை அலுவலகம், சென்னை அமைந்தகரையில் திறக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 11-ந்தேதி சென்னை வருகிறார். பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி வருகிற 25-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். இதற்காக 530 ஏக்கர் பரப்பளவில் கூட்டரங்கு அமைக்கப்படுகிறது. 5 லட்சம் இருக்கைகள் போடப்பட உள்ளன. நிகழ்ச்சியில், 10 லட்சம் பொதுமக்கள், பா.ஜனதா தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

பா.ஜனதாவுடன் பல்வேறு கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்பவர்கள் கூட்டணிக்கு வருகை தருவார்கள். 2024-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது கிடையாது. சட்டமன்ற தேர்தல் வரும்போது தமிழகத்தின் மற்ற கட்சிகள் குறித்து பேசுவோம். பா.ஜனதா களத்தில் பணியாற்றுகிறது" என்றார்.


Next Story