செல்போன் வாங்கி கொடுக்காததால் பிளஸ்-2 மாணவா் தற்கொலை
செம்பட்டி அருகே செல்போன் வாங்கி கொடுக்காததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவர்
செம்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரம். விவசாயி. அவருடைய மகன் யோகபிரபு (வயது 18). இவர், மைக்கேல்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
யோகபிரபு, தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டார். ஆனால் அவரது பெற்றோர், செல்போன் வாங்கி கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் மனம் உடைந்த யோகபிரபு, கடந்த 15-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பரிதாப சாவு
உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று யோகபிரபு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிங்காரம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்போன் வாங்கி கொடுக்காததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்த சம்பவம் செம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.