லாரி மோதி பிளம்பர் சாவு


லாரி மோதி பிளம்பர் சாவு
x

கபிஸ்தலம் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பிளம்பர்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சித்திரைவேல் மகன் பிரகதீஸ்வரன் (வயது27). பிளம்பர். நேற்று இரவு கணபதி அக்ரஹாரத்தில் வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வாழ்க்கை கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆடுதுறை பெருமாள் கோவில் அருகில் எதிரே மருத்துவக்குடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வல்லத்திற்கு சென்ற லாரி எதிர்பாராதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, தனிப்பிரிவு ஏட்டு ராகுல் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பிரகதீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.


Next Story