கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு
x
தினத்தந்தி 11 Feb 2023 12:45 AM IST (Updated: 11 Feb 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோட்ட அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக (கும்பகோணம்) கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப்பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை வாங்குவதும், கடன் பிணையத்தொகை வழங்கி கட்டாயப்பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர் முறை எந்த தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்கநடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது. இதில் பொது மேலாளர்கள் ஜெபராஜ்நவமணி, இளங்கோவன், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜன், முதன்மை தணிக்கை அலுவலர் சிவகுமார், துணை மேலாளர்கள் சிங்காரவேலு, முரளி, கணேசன், உதவி மேலாளர்கள் வெங்கடேசன், வேலுமணி, நாகமுத்து, ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story