நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 296 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்று கொண்ட அவர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் தீ விபத்தினால் வீடு இழந்த 2 நபர்களுக்கு, ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், உதவி ஆணையர் செல்வி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story