போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு


போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
x

மதுரையில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று கொண்ட நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் பங்கேற்றனர்.

மதுரை


மதுரையில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று கொண்ட நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் பங்கேற்றனர்.

உறுதிமொழி

தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் சாலையின் முக்கிய சந்திப்புகளில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதை பொருள் பழக்கத்திற்கு எதிர்ப்பான உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் கோரிப்பாளையம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் தலைமையில் பொதுமக்கள் விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொண்டனர். அப்போது துணை கமிஷனர் உறுதிமொழியை வாசிக்க அதனை பொதுமக்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

அப்போது தலைகவசத்தை அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த சிலரை தலைகவசத்தை அணியுமாறு துணை கமிஷனர் அறிவுறுத்தினார். இதில் போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார், உதவி கமிஷனர்கள் செல்வின், மாரியப்பன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், ஷோபனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகள் பங்கேற்பு

இதே போன்று தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அதில் தலைமையிட துணை கமிஷனர் மங்களேஸ்வரன், தெற்கு துணை கமிஷனர் பிரதீப், உதவி கமிஷனர் காமாட்சி, இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, மாடசாமி, மணிகண்டன் மற்றும் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நகரில் காளவாசல் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திக், பெரியார் பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், கணேஷ்ராம் நகரில் முக்கிய சந்திப்புகள், பள்ளிகள், கல்லூரிகளில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.


Next Story