டேக்வாண்டோ போட்டியில் 22 பதக்கங்களை வென்ற வீரர்கள் - சேலம் மாவட்ட கலெக்டருடன் சந்திப்பு
போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சேலம்,
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில், தமிழக அணி சார்பில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 10 தங்கப்பதக்கம், தலா 6 வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களை அவர்கள் வென்றுள்ளனர்.
இந்த நிலையில் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கலெக்டர் கார்மேகம், இது போல் பல பதக்கங்களை வென்று சாதனை படைக்க வேண்டும் என அவர்களை வாழ்த்தினார்.
Related Tags :
Next Story