பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்


பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்
x

நாமக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

நாமக்கல்

நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின் பேரில் நகர சுகாதார அலுவலர் டாக்டர் பரிதாவாணி, சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலைய கடைகள் மற்றும் நந்தவன தெரு, 16-வது வார்டுக்கு உட்பட்ட கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது 35 கிலோ பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற சோதனை நகராட்சி பகுதி முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story