28 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
28 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி பகுதியில் கமிஷனர் ஸ்டான்லி பாபு உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், செந்தில், சாந்திமீனா ஆகியோர் தலைமையில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதையொட்டி விருதுநகர் மெயின் பஜாரில் 78 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது 14 கடைகளில் இருந்து 28 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைக்காரர்களிடம் இருந்து மொத்தம் ரூ.17 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story