1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி
காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
ஆறுமுகநேரி:
தமிழக அரசின் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு தமிழக கடலோர பகுதிகளான 14 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் 1076 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் விதைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நல வாரியம், கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட இயக்கங்கள், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் காயல்பட்டினம் நகரசபை பகுதியான ஓடக்கரைக்கு கீழ்புறம் உள்ள கடற்கரை பகுதியில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக மீன்வளம் மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பனை விதையை விதைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், காயல்பட்டினம் வாவு வஜிகா பெண்கள் கல்லூரி மாணவிகள், பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகிய கல்லூரிகளின் மாணவர்கள் 550 பேர் இணைந்து கடற்கரையை சுற்றி உள்ள சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளில் பனை விதைகளை விதைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி கவிதா, வாவு வஜிஹா பெண்கள் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி செல்வசாந்தி, பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி பெலிக்ஸ் மற்றும் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தூத்துக்குடி தி.மு.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் ராம ஜெயம், காயல்பட்டினம் நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கே.ஏ.எஸ்.முத்து முகமது, தமிழ்நாடு வணிக நல வாரிய உறுப்பினரும் காயல்பட்டினம் நகரசபை உறுப்பினருமான எஸ்.பி.ஆர். சுகு என்ற ரங்கநாதன், நகரசபை கவுன்சிலர் அஜ்வாது முருகன், திருச்செந்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் நகர தி.மு.க. செயலாளர் வால் சுடலை, காயல்பட்டினம் நகர தி.மு.க. இளைஞரணி செயலாளர் கலிலூர் ரஹ்மான், நகர தி.மு.க. அவைத்தலைவர் முகமது மைதீன், மற்றும் 1 கோடி பனை விதை நடும் குழு உறுப்பினர்கள் ரெ.காமராசு நாடார், ஏ.ஆர்.டி. ராஜ்கமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.