1000 மரக்கன்றுகள் நடும் பணி


1000 மரக்கன்றுகள் நடும் பணி
x

1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி தாலுகா திம்மாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியளாக உள்ள இடத்தில் பள்ளியின் பசுமைக்காகவும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் 1000 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. இதனை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:- பூமியில் காடுகள் இல்லை என்றால் அதிகரித்துக் கொண்டே போகும், கடல் மட்டம் உயர்கின்றபோது நிலப்பகுதிகள் நீரில் மூழ்கி விடும். சுத்தமான குடிநீர் குறைந்து விடும். விளைச்சலுக்கு ஏற்ற விளைநிலங்கள் பாதிக்கப்படும். மரங்கள் அழிந்து போனால் பூச்சிகள் பறவைகள் அழிந்து விடும்.

மகரந்த சேர்க்கை சரியாக நடைபெற வேண்டும் என்றால் தேனீக்கள், வண்டுகள் தேவை. மழை வேண்டுமென்றால் உலகம் வெப்ப மாயமாவதை குறைக்கப்பட வேண்டும்.

ஒரு மரம் வளர்வதற்கு எத்தனை ஆண்டு காலங்கள் ஆகின்றது. நமக்காக நிற்கின்ற மரங்களை அடுத்த தலைமுறையினர் பயன்பெற இப்போதே நட வேண்டும். பறவைகளும், விலங்குகளும் இயற்கையை சார்ந்து இருந்ததால்தான் எப்பொழுது நிலநடுக்கம் வருகின்றது என்பதை அறிந்து கொள்கிறது.

அதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய நீங்கள் இயற்கையை நேசிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வேர்கள் அறக்கட்டளை குழுவினர், பள்ளி நிர்வாக மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story