அரசு கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக தேங்கி கிடக்கும் நெல்


தொடர் மழையால் கொள்முதல் பணி மந்தம் ஏற்பட்டதால் அரசு கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக நெல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

தொடர் மழையால் கொள்முதல் பணி மந்தம் ஏற்பட்டதால் அரசு கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக நெல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறுவை சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் சாலியமங்களம், ராராமுத்திரகோட்டை, களஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்தனர்.கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குவியல், குவியலாக கிடக்கும் நெல்

தொடர் மழையின் காரணமாக நெல்லை கொள்முதல் செய்யும் பணி மந்த நிலையில் உள்ளதால் சாலியமங்களம், ராராமுத்திரக்கோட்டை, களஞ்சேரி ஆகிய நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் நெல்லை குவியல், குவியலாக தேக்கமடைந்துள்ளன. இதனால் நெல்லை விற்பனை செய்ய வாரக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக நெல்லை வெளியூரை சேர்ந்த தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வியாபாரிகளிடம் விற்பனை செய்ய ஆர்வம்

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை காய வைக்க வார கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொட்டி வைக்கவோ, உலர்த்தவோ போதுமான இடவசதியும் இல்லை.

இதன் காரணமாக நெல்ைல தனியார் வியாபாரியிடம் விற்பனை செய்கின்றனர்.தனியாரிடம் மூட்டைக்கு ரூ. 30 முதல் ரூ.40 வரைகுறைவு என்றாலும் ஒரே நாளில் எந்த செலவும் இன்றி நெல்லை விற்பனை செய்ய முடிகிறது. உடனடியாக பணம் கிடைப்பதால் விவசாயிகள் தனியாரிடம் நெல்லை விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்றனர்.


Next Story