ஊர்க்காவல் படை பணிக்கு உடல் தகுதி தேர்வு


ஊர்க்காவல் படை பணிக்கு உடல் தகுதி தேர்வு
x

ஊர்க்காவல் படை பணிக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது.

திருச்சி

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்போது 300 பேர் பணியாற்றுகிறார்கள். போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் காலிப்பணியிடங்களுக்கு 35 ஆண்கள், 2 பெண்கள் என 37 ேபரை ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யும் முகாம் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில் உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 வயது பூர்த்தியடைந்த சமூக சேவையில் ஆர்வமுள்ள ஆண், பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேற்று தேர்வு நடைபெற்றது.

இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளித்து, அவர்கள் ஊர்க்காவல் படையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த தேர்வு முகாமில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமை தாங்கினார். இதில் 17 பெண்கள் உள்பட சுமார் 310 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உயரம் சரிபார்த்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இணை அதிகாரி ஊர் காவல் படை முகமது ரபி, ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி சிராஜூதீன், துணை வட்டார தளபதி முத்துமாலா தேவி, இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் பல அதிகாரிகள் ஈடுபட்டனர்.


Next Story