பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு


பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும்:  தமிழக அரசு உத்தரவு
x

போலி ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .

சென்னை,

சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது . கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என பதியப் படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story