கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் மனு
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கான்கிரீட் தளம்
கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
தமிழகத்தின் மிகப்பெரிய மண் அணையாக இருப்பது ஈரோடு மாவட்ட பவானிசாகர் அணை. மேலும் தமிழகத்தின் 2-வது பெரிய நீர் தேக்க அணையாகவும் இது விளங்குகிறது. இதன் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்று நாங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
போராட்டம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் கசிவு நீர் மூலம் பயன்பெறும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஆட்சியில் கீழ்பவானி பாசன வாய்க்காலை நவீனப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் செய்வதற்காக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்தி உள்ளோம்.
மேலும் கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானங்களை உள்ளது உள்ளபடியே சீரமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் மண்ணை கொண்டே சீரமைக்க வேண்டும். மேலும் எங்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை சிலர் விமா்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.