பெட்ரோலில் தண்ணீர் கலப்படம் - நடுரோட்டில் பழுதாகி நின்ற இருசக்கர வாகனங்கள்...!
அந்தியூர் அருகே தண்ணீர் கலந்த பெட்ரோலால் இருசக்கர வாகனங்கள் பழுதாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களுக்கு அந்தியூர் பகுதியில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் நிரப்பி உள்ளனர்.
தற்போது இந்த பங்கில் பெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது,
அந்தியூர் பகுதியில் உள்ள பங்கில் பெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நின்று விடுகின்றன. அவற்றை எடுத்துச் செல்வதற்காக வேறொரு வாகனத்தில் சென்று பெட்ரோலை நிரப்பி வாகனத்தை எடுத்து வருகின்றனர்.
சில சமயங்களில் வாகனங்கள் ஸ்டார்ட் ஆகாமல் மற்றொரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து மெக்கானிக்கிடம் விடுகின்றனர். அப்பொழுது பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருப்பது தெரிய வந்தது.
இதுபோல பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒரே நாளில் தண்ணீர் கலந்த பெட்ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்துபெட்ரோலியத்துறை அதிகாரிகள் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளை ஆய்வு செய்யது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.