கோவை- சேலம் பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்் கோட்ட மேலாளருக்கு கோரிக்கை மனு


கோவை- சேலம் பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்் கோட்ட மேலாளருக்கு கோரிக்கை மனு
x

கோவை- சேலம் பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்் கோட்ட மேலாளருக்கு கோரிக்கை மனு

ஈரோடு

ஈரோடு சீசன் டிக்கெட் ரெயில் பயணிகள் சங்க செயலாளர் மகாலிங்கம், துணைத்தலைவர் முருகேஷ் மற்றும் சங்கத்தினர் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:-

கோவை- சேலம்- கோவை பயணிகள் ரெயிலை (வண்டி எண்கள் 66602, 66603) மீண்டும் இயக்க வேண்டும். பயணிகள் ரெயில் கட்டணத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஈங்கூர் ரெயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். ஈரோடு ரெயில்வே நிலைய பார்சல் அலுவலகம் அருகே தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரம் அமைக்க வேண்டும். ஈரோடு ரெயில் நிலைய நடைமேடைகளில் அவசர மருத்துவ உதவிகள் உடனடியாக கிடைக்கப்பெற வேண்டும். பயணிகள் ரெயிலில் கழிவறைகளை முறையாக சுத்தம் செய்து, தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

திருச்சி - பாலக்காடு (16843), கோவை - நாகர்கோவில் (16322) ஆகிய ரெயில்கள் இருகூர் ரெயில் நிலையத்திலும், பாலக்காடு - திருச்சி (16844), நாகர்கோவில் - கோவை ரெயில் (16321) ஆகிய ரெயில்கள் இருகூர் மற்றும் சூலூர்ரோடு ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மெமோ பயணிகள் ரெயில்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story