கலெக்டரிடம், மின் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு


கலெக்டரிடம், மின் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு
x

கலெக்டரிடம், மின் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. மின்வாரிய தொழிற்சங்கத்தினர் திட்ட தலைவர் பீர்முகமது ஷா தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், 'தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தரப்படுத்தும் வரை வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்கி அடையாளம் காண வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

அப்போது நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் முருகன் மற்றும் மின்வாரிய சி.ஐ.டி.யு. செயலாளர் கந்தசாமி மற்றும் அந்தோணி கிளமென், தளபதி, சுவாமிதாஸ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story