நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அ.தி.மு.க.வினர் மனு


நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அ.தி.மு.க.வினர் மனு
x

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அ.தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, தென்மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் மற்றும் பலர் நேற்று காலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கொடுத்த மனுவில், நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 18-ந்தேதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அன்றைய தினம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளியின் மாண்பும், மரியாதையும் குறைகிறது. பள்ளியில் கட்சி நிகழ்ச்சி நடப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அங்கு கட்சி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கூறி இருந்தனர்.


Next Story