டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் மனு


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் மனு
x
தினத்தந்தி 23 Jun 2023 4:08 PM IST (Updated: 23 Jun 2023 5:31 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகளிடம் மனு அளித்தனர்.

அரசு மதுபான கடையை அகற்றக்கோரி எம்.எல்.ஏ.விடம்

ஆரணி நகரில் காந்தி ரோட்டில் அதிக அளவில் மக்கள் புழக்கத்தில் இருக்கும் சாலையாகும் அது மட்டுமல்லாமல் பஸ் நிலையம் மற்றும் அரசு பள்ளிகள் அருகாமையில் உள்ள பகுதியாகும். அப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு செல்லக்கூடியவர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடியும் மற்றும் சாலை விபத்தும் ஏற்படுகிறது.

நெடுஞ்சாலை பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க கூடாது என்ற சட்ட விதி இருந்தும் நீண்ட காலமாக காந்தி ரோடு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இந்த மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்த வண்ணம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு 500 மது கடைகளை அகற்றுவதாக அறிவிக்கப்பட்டது.

அதில் ஆரணி நகரில் நகர மைய பகுதியான காந்தி ரோட்டில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை அகற்றப்படவில்லை. அந்த கடையால் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக இருந்து வண்ணம் இருக்கிறது.எனவே அகற்ற வலியுறுத்தி மீண்டும் நேற்று வியாபாரிகள் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரான சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு வழங்கினர்.

மனுவை பெற்ற எம்.எல்.ஏ. உடனடியாக டாஸ்மாக் மேலாளரிமும், ஆரணி உதவி கலெக்டர் எம். தனலட்சுமியிடமும் அது குறித்து தெரிவித்தார். உடனடியாக அந்த கடையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் கால அவகாசம் கொடுங்கள் அதற்கான முயற்சிகள் எடுக்கிறோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.


Next Story