மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டா் தெரிவித்துள்ளார்
கடலூர்
கல்வி உதவித்தொகை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக 2023-2024-ம் நிதியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரமும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.6 ஆயிரமும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.8 ஆயிரமும், இளநிலை படிப்புக்கு ரூ.12 ஆயிரமும், முதுநிலை படிப்புக்கு ரூ.14 ஆயிரமும், வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பார்வையற்ற மாணவ-மாணவிகளுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல்12-ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.3 ஆயிரமும், இளநிலை படிப்புக்கு ரூ.5 ஆயிரமும், முதுநிலை படிப்புக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
இணையதளத்தில்...
எனவே கடலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் தங்களுடைய அடையாள அட்டை (அனைத்துப் பக்கங்களும் மருத்துவ சான்றுடன்), குடும்ப அட்டை, கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று, கல்வி சான்று, வங்கி புத்தகநகல் ஆகியவற்றுடன் https://tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspxஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண்.112, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் (தொலைபேசி எண் 04142 284415) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.