புதிய கட்டிடத்தில் நூலகம் செயல்பட அனுமதி
வாசுதேவநல்லூரில் புதிய கட்டிடத்தில் வாடகை இல்லாமல் நூலகம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் 2019 -2020 ஆண்டு தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு நூலக கட்டிடத்தில் நூலக துறையினர் இலவசமாக வாடகை இல்லாமல் பொது நூலகம் செயல்பட வாசுதேவநல்லூர் பேரூராட்சி மன்றம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான அரசு ஆணையை, வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து தலைவி லாவண்யா ராமேஸ்வரன், மாவட்ட நூலகத்துறை அலுவலரிடம் வழங்கினார்.
மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், நூலக கண்காணிப்பாளர் சங்கரன், வாசுதேவநல்லூர் கிளை நூலகர் அமுதா, பேரூராட்சியின் நியமன குழு உறுப்பினர் முனீஸ், மகாத்மா காந்தி சேவா சங்க தலைவர் கு.தவமணி மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டனர். விரைவில் மாவட்ட நூலக துறையும், வாசுதேவநல்லூர் பேரூராட்சி நிர்வாக துறையும் சேர்ந்து புதிய நூலகக் கட்டிடம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.