சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி: போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு


சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி:  போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 March 2023 8:53 AM IST (Updated: 5 March 2023 9:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்துவருகிறது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராஸ் காஸ்ட் காண்ட்ரக்ட் முறையில் இந்த பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மும்பை போன்ற மாநிலங்களில் இந்த திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


Next Story