"மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு மேற்கொள்ளப்படும்" - அமைச்சர் கே.என்.நேரு உறுதி


மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு மேற்கொள்ளப்படும் - அமைச்சர் கே.என்.நேரு உறுதி
x

சென்னையில் இன்று 40 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கிய இடங்களில், இந்த ஆண்டு நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், பருவமழை முடியும் வரை தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்தும் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் இன்று 40 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும் திரு.வி.க. நகர் மற்றும் கொளத்தூரில் நீர் தேங்கியதை குறிப்பிட்ட அவர், இனி வரும் நாட்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வுகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.


Next Story