பெரியார் பிறந்த நாள் விழா


பெரியார் பிறந்த நாள் விழா
x

கீழப்பாவூரில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பெரியார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கீழப்பாவூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் மற்றும் திராவிடர்கழகத்தைச் சேர்ந்த அய்.ராமச்சந்திரன், டேவிட் செல்லத்துரை, அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற விழாவில், அலங்கரிக்கப்பட்ட பெரியார் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் கீழப்பாவூர் யூனியன் தலைவி சீ.காவேரி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜான்சிஜெபமலர், தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Next Story