தர்மபுரி, அரூரில் பெரியார் பிறந்த நாள் விழா


தர்மபுரி, அரூரில் பெரியார் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 19 Sept 2023 1:00 AM IST (Updated: 19 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, அரூர் பகுதிகளில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி, அரூரில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பெரியார் பிறந்த நாள்

அரூரில் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் முல்லைரவி தலைமையில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் சூர்யா தனபால், நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், தமிழழகன், வின்னரசன், குப்பன், கோடீஸ்வரன், குமரன், தயாளன், ராஜா, சுரேஷ்குமார், ரவி, முருகேசன், வெங்கடேசன், மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரியில் அ.ம.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில பேரவை துணை தலைவர் பாலு, மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட பொருளாளர் மணிமேகலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ஏகநாதன், நகர செயலாளர் பார்த்திபன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சாம்ராஜ், கருணாகரன், தங்கமணி, பாஸ்கர், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.

தர்மபுரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராமதாஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கிருபானந்தன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சரவணன், ஆதிமூலம், பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், பத்மநாபன், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story