பெரியநாயகி அம்மன், அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


பெரியநாயகி அம்மன், அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x

உடையார்பாளையத்தில் பெரியநாயகி அம்மன், அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சித்தேரி கரையில் வடபுறம் அமைந்திருக்கும் பெரியநாயகி அம்மன், அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பெரிய ஏரிக்கரையில் இருந்து 75-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து கடைவீதி, கருட கம்ப தெரு வழியாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பெரியநாயகி அம்மன், அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story