பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள்


பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள்
x

பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட அளவிலான போட்டிகள் பெரியகுளம் அருகே நடந்தது

தேனி

பெரியகுளம் கல்வி மாவட்ட அளவில் 'டி' குறுவட்ட விளையாட்டு போட்டிகள் பெரியகுளம் அருகே அரசு தோட்டக்கலை கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். அ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாஸ் சில்வஸ்டர் வரவேற்று பேசினார். ஒலிம்பிக் தீபத்தை அ.வாடிப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயராம் ஏற்றி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் முத்து காமாட்சி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் 22 பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பீட்டர் செய்திருந்தார்.


Next Story