முன்னாள் அமைச்சருடன் பேரறிவாளன் சந்திப்பு


முன்னாள் அமைச்சருடன் பேரறிவாளன் சந்திப்பு
x

அமைச்சருடன் பேரறிவாளன் சந்திப்பு

ஈரோடு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் வைத்து பயங்கரமாக மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் பலர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பாக பேரறிவாளன் என்பவர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் பேரறிவாளன் 31 ஆண்டுகள் ஜெயில் தண்டனைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோர் விடுதலைக்கு உதவிய அவரது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் இரவு பேரறிவாளன் தனது தாயாருடன் ஈரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனை அவரது வீட்டில் சந்தித்தார்.

பேரறிவாளனை முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி மற்றும் அவருடைய கணவர் ஜெகதீசன் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுடன் மேலும் சிலரும் உடன் இருந்தனர்.


Next Story