பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக குன்னம் ராஜேந்திரன் போட்டியின்றி மீண்டும் தேர்வு


பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக குன்னம் ராஜேந்திரன் போட்டியின்றி மீண்டும் தேர்வு
x

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக குன்னம் சி.ராஜேந்திரன் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

குன்னம் ராஜேந்திரன் மீண்டும் தேர்வு

தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தலின் படி பெரம்பலூர் கட்சிக்கு பேரூர், ஒன்றிய, நகர, மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக குன்னம் சி.ராஜேந்திரன் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாவட்ட தி.மு.க. அவைத்தலைவராக நடராஜன், துணை செயலாளர்களாக (பொது) பாஸ்கர், (ஆதிதிராவிடர்) சம்பத், (மகளிர்) நூருல்ஹிதா இஸ்மாயில் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட பொருளாளர்

கட்சியின் மாவட்ட பொருளாளராக செ.ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக அட்சய கோபால், என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்களாக முகுந்தன், அண்ணாதுரை, ஜெகதீஸ்வரன், அழகுநீலமேகம், பட்டுசெல்வி ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் ஒன்றிய செயலாளர்களாக ராஜ்குமார் (பெரம்பலூர்), ஜெகதீசன் (வேப்பந்தட்டை கிழக்கு), நல்லதம்பி (வேப்பந்தட்டை மேற்கு), தி.மதியழகன் (வேப்பூர் வடக்கு), சி.ராஜேந்திரன் (வேப்பூர் தெற்கு), கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர் கிழக்கு), சோ.மதியழகன் (ஆலத்தூர் மேற்கு) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்சியினரும், தோழமை கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story