மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
x

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணை நிரம்பி தனது முழு கொள்ளளவான 120 அடியில் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 21 நாட்களாக அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்தநிலையில் டெல்டா பாசனத்துக்கு தற்போது தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 643 கனஅடியாக உள்ளது. நீர்வரத்தை விட, அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது.


Next Story