மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விழுப்புரம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப்பணியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2011-க்கு முன் பெற்று வந்த சிறப்பு காலமுறை ஊதியத்துடன் மீண்டும் பணி வழங்க வேண்டும், பணியிழந்த காலத்துக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தவேல் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜராஜசோழன் முன்னிலை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் புருஷோத்தமன், முனியம்மாள், அய்யனார், குமார், இணையத்துல்லா, அண்ணாதுரை, வெங்கடேசன், பாலு உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story