விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டிபன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மக்கள் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் ராமர், மக்கள் அதிகாரம் அமைப்பு விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story