மக்கள் நேர்காணல் முகாம்
திருமருகல் அருகே மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பில்லாளி, திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூர், கீழப்புதனூர், காரையூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை மாவட்ட தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) கிரிஜாதேவி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜீவா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாய கூடம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 269 மனுக்கள் அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி சகாயராஜ், பாண்டியன் சத்யமூர்த்தி, தமிழரசி கணேசன், கலாராணி உத்திராபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.