போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
தென்காசி
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் புகார் செய்து நிலுவையில் இருந்து வந்த புகார் மனுக்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 45 புகார் மனுக்களில் 39 புகார் மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story