காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.

காஞ்சிபுரம்

இதில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பொதுமக்களிடம் இருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 322 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

விலையில்லா பாடப்புத்தகங்கள்

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக, ஓரிக்கை, ஆதுரா மனவர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிக்கு 35 எண்ணிக்கை கொண்ட விலையில்லா பாடப்புத்தகங்களும், காஞ்சீபுரம் ஆத்திச்சூடி மனவர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிக்கு 33 எண்ணிக்கை கொண்ட விலையில்லா பாடப்புத்தகங்களும், காஞ்சீபுரம், வித்யபிரகாசம் மனவர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிக்கு 37 எண்ணிக்கை கொண்ட விலையில்லா பாடப்புத்தகங்களும் மொத்தம் 105 எண்ணிக்கை கொண்ட விலையில்லா பாடப்புத்தகங்களை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பிட்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, காஞ்சீபுரம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story