மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 212 மனுக்கள் பெறப்பட்டன.
Related Tags :
Next Story