மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடபெற்றது.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப் பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 318 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி, உதவி ஆணையாளர் (கலால்) வரதராஜ் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.