மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. நெல்லை மாநகர கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஸ் பசேரா கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். தொடர்ந்து அந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்திட சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மொத்தம் 16 பேர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story