மக்கள் குறைதீர்க்கும் முகாம்


மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 19 Oct 2023 4:00 AM IST (Updated: 19 Oct 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சொத்துவரி மற்றும் குடிநீர் வரியில் பெயர் மாற்றம், புதுப்பித்தல் மற்றும் பாதாள சாக்கடை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட மக்கள் மனு கொடுத்தனர்.

இந்த மனுக்கள் அந்தந்த பிரிவு அலுவலர்களிடம் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முகாமில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் வில்லியம் சகாயராஜ், உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story