மக்கள் குறை தீர்க்கும் முகாம்


மக்கள் குறை தீர்க்கும் முகாம்
x

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடந்து வருகிறது. நேற்று காலையில் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்த முகாமிற்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அப்போது டவுன் ரெங்கநாதபுரம் ஊர்மக்கள் பலர் மேயர் சரவணனிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

பழையபேட்டை அனவரசுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் பாதாள சாக்கடை குழாய் அமைப்பது குறித்தும், அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் அன்பு அங்கப்பன் என்பவர் பாளையங்கோட்டை ஜவகர் திடலுக்கு கீழ்ப்புறம் அம்மா உணவகம் அருகில் உள்ள பகுதிகளை சுத்தம் செய்து தரவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

முன்னதாக 27-வது வார்டு கவுன்சிலர் உலகநாதன், 24-வது வார்டு கவுன்சிலர் ரவீந்தர், 25-வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மனு கொடுத்தனர். தொடா்ந்து அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி மேயர் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இந்த முகாமில் தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் கிறிஸ்டி, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து, சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story