மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில், தென்காசி வடக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மூணார் முருகன், தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிறிஸ்தவ சமூகநீதி பேரவை மாவட்ட செயலாளர் சுபாஷ் வரவேற்று பேசினார். தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் பரமசிவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் அப்துல் நசீர், நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகமது, மக்கள் தேச கட்சி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜாராம், தேவகுமாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பசாமி, கிறிஸ்தவ சமூகநீதி பேரவை மாவட்ட துணைச் செயலாளர் கணேஷ், மாவட்ட பொருளாளர் சகாயம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரின்ஸ் ரூபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story