கள்ளக்குறிச்சியில் நடந்தமக்கள் நீதிமன்றத்தில் 591 வழக்குகளுக்கு தீர்வு
கள்ளக்குறிச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 591 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கீதாராணி, முதன்மை சார்பு நீதிபதி வீரண்ணன், கூடுதல் சார்பு நீதிபதி தனசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், கூடுதல் சார்பு நீதிபதி அகமது அலி, குற்றவியல் நீதித்துறை விரைவு நீதிபதி சுகந்தி ஆகியோர் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், வங்கி வழக்குகள் மற்றும் காசோலை வழக்குகள் என மொத்தம் 591 வழக்குகளுக்கு ரூபாய் 3 கோடியே 54 லட்சத்து 5 ஆயிரத்து 25-க்கு தீர்வு காணப்பட்டது. முகாமில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமசாமி, சங்க செயலாளர் சீனிவாசள், அரசு வக்கீல் ராமலிங்கம் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.