மக்கள் நீதிமன்றம் மூலம்6,824 வழக்குகளுக்கு உடனடி தீர்வுவிபத்தில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு


மக்கள் நீதிமன்றம் மூலம்6,824 வழக்குகளுக்கு உடனடி தீர்வுவிபத்தில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு
x

சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 6,824 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், விபத்தில் இறந்த டிரைவரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 6,824 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், விபத்தில் இறந்த டிரைவரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டிலும், சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், விபத்து, சிவில், காசோலை, குடும்ப நலம், உரிமையியல் உள்பட 9 ஆயிரத்து 367 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது. சேலம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதி தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

சேலம் உள்பட மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 19 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொண்டு விசாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரும் கலந்து கொண்டு தங்களது வழக்குகளை முடித்து கொண்டனர். அதாவது, 9 ஆயிரத்து 367 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொண்டதில் 6 ஆயிரத்து 824 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.26 கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்து 484-க்கு பைசல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.20 லட்சம் இழப்பீடு

ஓமலூர் பவளத்தானூரை சேர்ந்த பொக்லைன் டிரைவரான செந்தில்வேல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி சேலம்-தாரமங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வேன் மோதி உயிரிழந்தார். இதனால் அவருடைய மனைவி சுபாஷினி, விபத்து இழப்பீடு கேட்டு சேலம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நேற்று சமரசத்திற்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சுபாஷினிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தொகைக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார். இதேபோல், கடந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி கார்த்திகேயன் என்பவர் ஓமலூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, லாரி மோதி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மனைவி கீதாலட்சுமி தரப்பில் இழப்பீடு தொகை கேட்டு சேலம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டு அவருக்கு ரூ.17 லட்சத்துக்கான இழப்பீடு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.


Next Story