மக்கள் நேர்காணல் முகாம்
திருவையாறு அருகே விளாங்குடியில் மக்கள் நேர்காணல் முகாம் மக்கள் நேர்காணல் முகாம் 28-ந் தேதி நடக்கிறது.
தஞ்சாவூர்
திருவையாறு;
திருவையாறு வட்டம், விளாங்குடி கிராமத்தில் 28-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) தஞ்சாவூர் மாவட்ட கலெக்்டர் தினோஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். விளாங்குடி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கலாம். மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறும் விளாங்குடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதேபோல் இலவச கால் நடை சிகிச்சை முகாமும் நடைபெறுகிறது. இந்த தகவலை திருவையாறு தாசில்தார் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story