சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்
சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
கறம்பக்குடி, பிப்.28-
கறம்பக்குடி அருகே துவார் கிராமத்தில் இருந்து கருப்பட்டிபட்டி, மீனம்பட்டி வழியாக கந்தர்வகோட்டை செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், பள்ளி மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று சாலையில் உள்ள பள்ளம் மற்றும் குழிகளை சிமெண்டு கலவை பூசி அடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமங்கள் சூழ்ந்த இப்பகுதி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் கூறினர்.
Related Tags :
Next Story