வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாைல மறியல்-போலீஸ் நிலையம் முற்றுகை
திருவிடைமருதூரில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் குழந்தையை அழைத்து சென்றபோது ஆற்றில் விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக அந்த வாலிபரை கைது செய்யக்கோரி குழந்தையின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையத்தையும் முற்றுைகயிட்டனர்.
திருவிடைமருதூரில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் குழந்தையை அழைத்து சென்றபோது ஆற்றில் விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக அந்த வாலிபரை கைது செய்யக்கோரி குழந்தையின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையத்தையும் முற்றுைகயிட்டனர்.
ஆற்றில் விழுந்து சாவு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரிடிக்ஸ் சாம்சன் (வயது22). இவர் கடந்த 19-ந் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மகன் ரோஜர் என்ற 2 வயது குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வீரசோழன் ஆற்றுக்கட்டு கரையில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது, மோட்டார் சைக்கிளுடன் பிரிடிக்ஸ் சாம்சனும், குழந்தையும் ஆற்றில் விழுந்தனர்.
சிறிது நேரத்தில் பிரிடிக்ஸ் சாம்சன் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். ஆனால் மோட்டார் சைக்கிளுடன் குழந்தை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டான்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதை அறிந்த திருவிடைமருதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மறுநாள் குழந்தை ரோஜர் சடலமாக மீட்கப்பட்டான். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பிரிடிக்ஸ் சாம்சன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதைத்தொடர்ந்து கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையின் சாவுக்கு காரணமான பிரிடிக்ஸ் சாம்சனை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் ேபாக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
3 மணிநேரம் மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் 3 மணி நேரம் சாலை மறியல் நீடித்தது. இதையடுத்து போலீசாருடன் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக அவர்கள் சாலை மறியலை கைவிட்டு போலீஸ் நிலையத்தை மீண்டும் முற்றுகையிட்டு, அந்த வாலிபரை கைது செய்த பிறகுதான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என கூறினர்.
அப்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததின் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக திருவிடைமருதூரில் பரபரப்பு ஏற்பட்டது.